நாட்டில் முடக்கல் நிலை ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம் செய்யும் நடவடிக்கை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ‘வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி’ கனடா புலம்பெயர் அமைப்பினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிரான் பறங்கியாமடு மீனவர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நவா,மற்றும் சி.தேவா அகியோர்களது ஒழுங்கமைப்பின் ஊடாக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்.எஸ்.ராஜ்பாவு. வை.மங்கள தர்ஷன் ஆசிரியர் ஆகியோர்கள் இதனை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.




