20 வயது பெண்ணை திருமணம் செய்த 19 வயது பெண்!

Date:

ஹரியானா மாநிலம் குர்கிராம்மிற்குட்பட்ட பட்டாவுடி என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒவர் ஜாஜ்ஜர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுடன் பள்ளி காலம் முதலே நட்ப்பாக இருந்தார். அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்த நிலையில் இருவர்களும் தோழிகளாக இருந்தனர்.

இந்நிலையில் இந்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. ஆம் இருவரும் பெண்கள் என்கிற நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் அவர்களது வீட்டில் சொல்லியுள்ளனர். ஆனால் இரு வீட்டாரும் இது சமூதாயம் ஒத்துக்கொள்ளாத விஷயம் என்பதால் இவர்கள் ஒருவரை ஒருவர் மறக்கும்படி அறிவுரை கூறியுள்ளனர்.

இந்நிலையில் பட்டாவுடியை சேர்ந்த 20 வயது பெண் கடந்த சில 10 நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த பெண்ணின் தந்தை போலீசில் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி கடந்த சனிக்கிழமை பிடித்தனர். அப்பொழுது தான் அவர்கள் தான் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் சோக்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதில் பட்டாவுடி என்ற பகுதியை சேர்ந்த பெண் மனைவியாகும், ஜாஜ்ஜர் பகுதியை சேர்ந்த பெண் கணவனாகவும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் இந்த இரண்டு பெண்களையும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட் இரு பெண்களும் 18 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் வாழாததும் அவர்கள் உரிமை என்றும், கூறியுள்ளது. அந்த பெண்களின் பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும், அவர்கள் வர மறுத்ததால் தற்போது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த செய்தியில் அந்த பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்