நான்கு மாவட்டங்களில் இருந்து நேற்று 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நேற்று 2,361 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,638 ஆக உயர்ந்தது.
நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 362 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து 339 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 338 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 322 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 194 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 104 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 93 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 87 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 66 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 57 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 55 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 40 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 36 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 34 பேர், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து தலா 25 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 22 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 20 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 17 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 6 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 3 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 2 பேர், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 32 பேரும் நேற்று தொற்றுடன் அடையளம் காணப்பட்டனர்.




