ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்!

Date:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் நடித்துவரும் ‘தளபதி 65’ படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் விலகவே, அவருக்கு பதிலாக நெல்சன் இயக்கி வருகிறார்.

அதற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் நாயகன் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘ஜி.ஏ.2 பிக்சர்ஸ்’. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் இன்னொரு பங்குதாரராக இருப்பவர் பன்னி வாசு. இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அளித்துள்ள பேட்டியில், அல்லு அர்ஜுனின் அடுத்த படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் ‘புஷ்பா’ படத்தைத் தொடர்ந்து, வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாகும் ‘ஐகான்’ படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா 2’, ஏ.ஆர்.முருகதாஸ் படம், போயபதி சீனு, கொரட்டலா சிவா ஆகியோரது படங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பன்னி வாசு.

இவரது இந்தப் பேட்டியை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்