பா.ரஞ்சித் உடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

Date:

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சமாகவே படங்களை எடுத்து வந்த இயக்குனர்கள் மத்தியில் குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்த படங்களை எடுத்து தனது சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ரஞ்சித்.தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் போன்ற கருத்தியல் கொண்ட இயக்குனர்கள் உருவாக விதை போட்டவராக ரஞ்சித் அமைந்துள்ளார்.

பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இரண்டு பிரிவினருக்கு இடையே நடக்கும் குத்துச் சண்டைப் போட்டிகளை மையமாக வைத்து அப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. இந்தப் படமும் உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம்.

சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை அடுத்து பா. ரஞ்சித்துடன் சூர்யா கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்