தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை, காலி மாவட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டமை போன்ற சர்ச்சைகளையடுத்து காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய தொற்றுநோயியல் வைத்தியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து பலர் சென்று, காலியில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் 2 வது டோஸை செலுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை (07) காலி மாவட்டத்திற்கு பயணித்ததாகக் கூறப்படுகிறது. காலி மாவட்டத்தின் உனவதுனவிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 வது டோஸ் செலுத்துவதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் வாகனங்கள் மாகாணங்களைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.




