நயனாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த மகோற்சவம்: ஆலய நிர்வாகம் திடீர் முடிவு!

Date:

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் தற்போது நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக வரும் 10ஆம் திகதி நடைபெறாதென ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்கள்.

இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை 15 பேருடன் நடத்த சுகாதாரப் பிரிவினர் அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில். இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர், 10ஆம் திகதி மகோற்சவத்தை நடத்துவதில்லையென முடிவெடுத்தனர்.

மகோற்சவத்தை மீள எப்பொழுது நடத்துவதென விவாதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு திகதிகள் பரிந்துரைக்கப்பட்ட போதும், இறுதி திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென ஆலய அறங்காவலர் சபை தமிழ்பக்கத்திடம் தெரிவித்தது.

மட்டுப்படுத்தளவிலான மக்களே அனுமதிக்கப்படக்கூடிய நிலைமையுள்ள போது, வழக்கம் போல பிரதேச மக்கள் அதிகளவில் கூடும் வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்