யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை
பொதுவாக கூட்டமாக வாழும் யானைகள் சில நேரம் தன் கூட்டத்தில் உள்ள ஒரு யானையை மட்டும் கழட்டிவிட்டுவிடும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இப்படியாக தனியாக இருக்கும் யானைகள் முதலில் சோம்பேரித்தனமாக மாறும் சேட்டைகள் செய்ய ஆரம்பிக்கும்
அப்படியாக சமீபத்தில் தனியாக வந்த யானை செய்த செயல் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக Sheldrick Wildlife என்ற அமைப்பு விலங்குகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் தனித்து விடப்பட்ட யானையை கண்காணித்து அதற்கு தேவையானவைகளை செய்து வந்தது. அதற்காக தண்ணீர் பைக் அமைத்து கொடுத்திருந்தது.
பொதுவாக யானைகள் தண்ணீரை தன் துதிக்கையில் நிரப்பி பின்னர் அதை வாயில் வைத்து குடிக்கும் இதை தான் நம் எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் வைரலாகி வரும் வீடியோவில் யானை நேராக பைப்பை தன் துதிக்கையால் எடுத்து அதை வாயில் வைத்து தண்ணீரை குடிக்கிறது.
https://twitter.com/i/status/1400146495840587786
இந்த வீடியோவை பதிவு செய்த Sheldrick Wildlife அமைப்பு இதை சோம்பேறி யானை என வர்ணித்திருந்தது. யானையின் வழக்கமான நடவடிக்கையை தன் சோம்பேறிதனத்தால் எளிதாக மாற்ற இதை யானை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.




