நடிகர் அர்ஜுன் தாஸ் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கமல் தற்போது லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவிருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் அர்ஜுன் தாஸுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். ‘கைதி’ படம் தான் அர்ஜுன் தாஸை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதையடுத்து ‘மாஸ்டர்’ படத்திலும் அர்ஜுன் தாஸை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் கமல் உடன் லோகேஷ் கூட்டணி வைத்துள்ள விக்ரம் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அர்ஜுன் தாஸ் நடித்தால் எப்படியும் வில்லனாகத் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




