வாழைச்சேனையில் தொடரும் பரிசோதனை!

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான மருதநகரில் இன்று 124 பேருக்கும், நேற்று 150 பேருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பெறுபேறுகளின் முடிவின்படியே முடக்கல் நிலையில் இருந்து மேற்படி கிராமத்தினை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் தெரிவித்தார்.

மேற்படி கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் தொடர்புபட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் அப் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை,மாலை வேளைகளில் கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஒலி பெருக்கி மூலம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பரிசோதனையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.ஜசோதரன் ,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி அடிக்கடி பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவில் கதிரவன் கலைக்கழகத்தின் 196 ஆவது பட்டிமன்றம்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின்...

வெவ்வேறு காலகட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்… மயானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்: செம்மணி புதைகுழி அறிக்கையின் முழுமையான தொகுப்பு!

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்