பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏனைய பீடங்களில் 500 பேருமாக மொத்தமாக 2100 கொரோனா பேருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ், இன்று காலை யாழ் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றும் நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குண ராஜா தடுப்பூசி ஏற்றி ஆரம்பித்து வைக்க அனைத்துபல்கலைக்கழகப் பணியாளர்களும் தமக்குரிய தடுப்பூசிகளின் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாட்டினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதேவேளை, கொரொனா சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்படாமல், பல்கலைகழகத்திற்கு பெருந்தொகை தடுப்பூசி ஒதுக்கப்பட்டமை குறித்த விமர்சனமும் மருத்துவ வட்டாரங்களில் உள்ளது.




