நடிகை சாந்தினிக்கு எதிர்ப்பு; போர்க்கொடி தூக்கிய ஆண்கள் சங்கம்!

Date:

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ள நடிகை சாந்தினியை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்துள்ளது.

தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு முக்கிய புள்ளிகளுடன் நட்டை தேடி செல்லும் நடிகைகள் சிலர் உண்டு. அதில் சிலர் பணம் பறிக்கும் செய்லகிள் ஈடுபடுவதும் வாடிக்கையான செயல்.

அந்த வகையில் பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரே படத்தில் மட்டும் தலைகாட்டிய நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் சாந்தினியை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நாடோடிகள் புகழ் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். மலேசியாவை சேர்ந்த அவர் மணிகண்டனால் 3 முறை கருவுற்று, வலுக்கட்டாயமாக கற்பை கலைத்து, திருமணம் என்னும் ஆசை வார்த்தையால் ஏமாற்றமடைந்தேன் என புகார் அளித்தார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் கைது நடவடிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.ஆனால் இந்த விவகாரத்தில் நடிகை சாந்தினி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதை வரவேற்கிறோம் என்றும், அதே நேரம் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் தெரிந்தும், அவருடன் நெருங்கி பழகி கரு கலைப்பு செய்தும், ஒரு குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மணிகண்டன் அமைச்சராக இருந்ததால்தான் அவரை பயன்படுத்த அவரின் குடும்பத்தை பிரித்து கூட்டு சதி செய்தும் பின்னர் மிரட்டல் விடுத்ததும் தெரியவருகிறது. இதனால் நடிகை சாந்தினி மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவங்களால் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கையும், பல குழந்தைகள் சமூக இழிச்சொல்லுக்கு ஆளாகி ஆதரவற்றி நிலையில் தவிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆண் பெண் இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இந்திய தண்டனை சட்டம் 497ஐ உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் பொதுமக்கள் மத்தியில் இந்த சட்டம் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை ரத்து தற்போதைய காலத்துக்கு ஏற்ற வாறு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்