அந்த மாதிரி வீடியோ எதிர்பார்க்காதீங்க; ரசிகர்களின் கேள்விக்கு அனிதா சம்பத்!

Date:

ரசிகர்கள் அனிதா சம்பத்தின் youtube சேனலில் கமெண்ட் செய்திருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார். வீடியோ உள்ளே.

அனிதா சம்பத் ரசிகர்கள் prank வீடியோ, ஹோம் டூர், பாத்ரூம் டூர் போடுங்கள் என கேட்டு வருகிறார்களாம். ஆனால் அப்படிபட்ட வீடியோக்கள் போட மாட்டோம் என அனிதா உறுதியாக தெரிவித்து உள்ளார்.அனிதா சம்பத் ஆரம்பகாலத்தில் செய்தி வாசிப்பாளராக தான் அதிகம் பாப்புலர் ஆனார். அவரது போட்டோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாக்கினார்கள் நெட்டிசன்கள். அந்த புகழின் மூலமாக சில படங்களில் செய்தி வாசிப்பாளராக தோன்றவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு பிக் பாஸ் வாய்ப்பு வரவே அவர் செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், எமோஷ்னலாக அவர் ஆரி உள்ளிட்டவர்களிடம் சண்டை போட்டது அவருக்கு நெகடிவாக அமைந்துவிட்டது. கணவரை பிரபாவை பத்தி பேசாதீங்க என சொல்லி நாக்கை துருத்தி ஆரியை அவர் எச்சரித்ததெல்லாம் யாரும் மறந்திருக்க முடியாது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தபிறகு அனிதா சம்பத்தின் அப்பா மரணம் அவருக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதற்கு பிறகு மீடியாவிடம் இருந்து ஒதுங்கியே இருக்கும் அனிதா சம்பத் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அவர் நடத்தி வருகிறார்.

அந்த சேனலில் அவரை பற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் வீடியோக்களில் கமெண்டில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு அனிதா மற்றும் அவரது கணவர் பிரபா இருவரும் சேர்ந்து பதில் அளித்து உள்ளனர்.

அதிகம் பேர் Prank வீடியோ போடுங்க என தான் கேட்டிருக்கிறார்கள், prank செய்வது தவறு என நாங்கள் நினைக்கிறோம். ஒருவரை அழ வைத்துவிட்டு prank என இறுதியில் சொல்வது தவறு எனவும் கூறி உள்ளனர். அதனால prank வீடியோ அனிதா சம்பத் சேனலில் வரும் என எதிர்பார்க்காதீங்க.

மேலும் ஹோம் டூர், பாத்ரூம் டூர் போன்ற வீடியோக்கள் போடுங்க என ரசிகர்கள் கேட்டிருப்பது பற்றி பேசிய அனிதா சம்பத், ‘எங்க வீடு அவ்ளோ பெருசு இல்லை. சொந்தமாக பெரிய வீடு வாங்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அது நடந்தபின் வீடியோ வெளியிடுகிறோம். பாத்ரூம் டூர் வீடியோ போடும் அளவுக்கு அங்கு எதுவும் இல்லை’ என்றும் அனிதா கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்