வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ; 26 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Date:

வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் ஒன்றோன்று மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். படகில் அதிக பயணிகள் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்