அறிமுக போட்டியில் ஜெயவிக்ரம 11 விக்கெட்டுக்கள்: பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை!

Date:

22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம அறிமுக ஆட்டத்திலேயே 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க, பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.

வெற்றி… ஒரேயொரு வெற்றி… அது சிம்பாவே என்றால் கூட பரவாயில்லை என இலங்கை கிரிக்கெட் அங்கலாய்த்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு டெஸ்ட் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது.

இன்று காலை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட்டை வெற்றியீட்டி, தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது.

437 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய பங்களாதேஷ் 227 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது,

ஜெயவிக்ரம  இரண்டாவது இன்னிங்ஸில் 5/86 என பந்து வீச்சில் கலக்கினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் 6 விக்கெட் வீழ்த்தினார். 11/178   என அறிமுக போட்டியொன்றில் இலங்கை வீரரின் சிறந்த பந்துவீச்சு சொதனையும் அவர் வசமானது.

மற்றொரு முனையில் நெருக்கடி கொடுத்த ரமேஷ் மெண்டிஸ் 103 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் தரப்பில் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட் இழப்பிற்கு 493 என ஆட்டத்தை இடைநிறுத்தியது. திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்ன சதம் அடித்தனர்.

முதல் இன்னிஹ்ஸை ஆடிய பங்களாதேஷ் 251 ஓட்டங்களிற்கு ஆட்டழிழந்தது.

இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 194/9 என ஆட்டத்தை இடைநிறுத்தியது.

ஆட்டநாயகன் பிரவீன் ஜெயவிக்ரமக.

இந்த மாத இறுதியில் இலங்கை ஒரு நாள் சர்வதேச தொடருக்கு பங்களாதேஷுக்கு செல்லவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்