டிப்பர் வழிமறிக்கப்பட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட சாரதி: வவுனியாவில் நடுவீதியில் கொடூரம்!

Date:

வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அந்த பகுதியில் நின்றவர்கள், குரல் எழுப்பியபடி உதவிக்கு ஓடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் தமது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திருநாவற்குளம் மைதானத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. ஒருவர் மீது குழுவொன்று கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த வீடியோ வெளியாகியிருந்தது.

தாக்குதலாளிகள் கைது செய்யப்படவில்லையென மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், வவுனியா எம்.பி திலீபன் தலையிட்டதையடுத்து, பொலிசார் சிலரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, இன்றைய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்