சில்லாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா தீயிடப்பட்டது!

Date:

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில் தேடுதல் மேற்கொண்ட போது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ கஞ்சா காணப்பட்டதை அவதானித்த கடற்படையினர் அதனை இன்று மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளவாலை பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மாலை கைப்பற்றப்பட்ட 240 கிலோ கேரள கஞ்சா யாவும் கொரோனா அச்சம் காரணமாக கடற்படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இவை இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்