குட்டி குரங்கு ஒன்று தன்னுடைய தாய் குரங்கைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் அழகு;வீடியோ வைரல்!

Date:

குட்டி குரங்கு ஒன்று தன்னுடைய தாய் குரங்கைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ க்ளிப் ஒன்றை ஹர்ஷ் என்பவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்த பலரும் அவருக்கு, இப்படியொரு அழகான வீடியோவை பகிர்ந்ததற்காக நன்றி சொல்வதோடு, பலரும் தங்களுடைய அம்மாவுக்கு இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வீடியோவைப் பார்ப்பவர்களால், குட்டி குரங்கு தாய் குரங்கின் மேல் பாய்வதைப் பார்த்து ஆனந்தப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, எல்லோருக்கும் தங்களுடைய அம்மா கூப்பிட்டு இறுக்கமாக கட்டிப் பிடிப்பது போன்ற உணர்வையே தருகிறது.

இந்த வீடியோவின் தொடக்கத்தில், ஒரு குட்டி குரங்கு மரக்கிளையில் ஏற முயற்சி செய்து தாவுகிறது. அப்படி தாவும்போது, அருகிலிருந்த கிளையில் உட்கார்ந்திருந்த தாய்க்குரங்கு தன்னுடைய குட்டியின் வாலைப் பிடித்து இழுத்து, ஆபத்திலிருந்து காப்பாற்றியது. உடனே இறங்கி வந்த குட்டி குரங்கு தன்னுடைய அம்மா குரங்கை இறுக்கிக் கட்டிப் பிடித்து அழகாக முத்தம் கொடுக்கிறது.

https://twitter.com/i/status/1385991033431855107

இதை பகிர்ந்தவர், அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, கடவுளே நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நானும் என் அம்மாவை இதுபோல கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். நீங்கள் என் அம்மாவின் கன்னத்தில் நீங்கள் முத்தமிட வேண்டும். அது நான் கொடுத்தது என்று சொல்ல வேண்டும் என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அப்படி அந்த குரங்கு கொடுத்த அழகான முத்தத்தை நீங்களும் பார்த்து ரசிக்க வேண்டுமா?

இரண்டே நாட்களில் இந்த வீடியோ கிட்டதட்ட 76,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்