தென்மராட்சியில் கொடூரம்: கொள்ளையர்களால் வயோதிபத்தம்பதி சித்திரவதை; கணவர் கொலை!

Date:

தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வாழும் வீடொன்றிற்குள் நுழைந்துள்ளது.

முதிய தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

முதியவரின் கழுத்தை நெரித்து சித்திரவதை செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவராசா (70) என்பவரே உயிரிழந்தார்.

அந்த வீட்டில் தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டிருந்ததால் எச்சரிக்கையடைந்த அயல்வீட்டு இளைஞர்கள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு சென்ற போது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.

கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்கப்பட்டார். கணவர் உயிரிழந்திருந்தார்.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


தமிழ் பக்க செய்திகளை ஜேவிபி, நியூலங்கா, தீவகம் உள்ளிட்ட ஏராளம் இணையங்கள் மீள் பிரசுரம் செய்கின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்க செய்திகளை பாருங்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்