யாழ் புதிய சந்தை நாளை முதல் மறுஅறிவித்தல் வரை பூட்டப்படுகிறது.
யாழ் நவீன சந்தைக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
சந்தைக்குள் பனங்கட்டி விற்பனை செய்யும் 7 பேரும், மரக்கறி விற்பனை செய்யும் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று அங்கு 80 பேருக்க பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எழுமாற்றான சோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாளை நவீன சந்தையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஏனையவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும்.




