உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

Date:

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 129வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலையமைப்பு மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தனிநபர் சுதந்திரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஊழல், சமூக ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், 149 நாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த பட்டியின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த ஒன்பது இடங்களில் முறையே டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, ஸ்வீடன், லக்ச்ம்பேர்க், நியூசிலாந்து, ஒஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடம் 130வது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் ஒரு இடம் முன்னேறி, 129வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 10 இடங்களில் ஐரோப்பா அல்லாத நாடாக நியூசிலாந்து இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 13வது இடத்திலிருந்து பிரித்தானியா 17வது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

பல ஆசிய நாடுகள் கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்ததை விட முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 94வது இடத்திலிருந்த சீனா 84வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் உலகில் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளாக ஆப்கானிஸ்தான், அதைத் தொடர்ந்து லெசோதோ, பொட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்