போலி நாணயத்தாள்களில் எச்சரிக்கையாக இருங்கள்!

Date:

5,000, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள்  தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

களனி பகுதியில் நேற்று இருவர் 1,000 மற்றும் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை விநியோகித்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ரூ .1000 மற்றும் ரூ. 5000 போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது குறித்து பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நாணயத்தாள்களை பரிமாறிக்கொள்ளும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவை போலி நாணயத்தாள்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது போலி நாணயத்தாள்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொலிசார் கேட்டுக்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்