நடுவீதியில் மனைவியை 35 முறை கத்தியால் குத்திய சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு விளக்கமறியல்!

Date:

திருகோணமலை கந்தளாய் பகுதியில் நடு வீதியில் வைத்து மனைவியை 35 முறை கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்க கந்தளாய் மாவட்ட நீதிவான் திஷானி தேசபந்து உத்தரவிட்டார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியில் கடந்த 18ஆம் திகதி இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்தது.

கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரியும் பெண் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் வருகைத் வந்து கொண்டிருந்த போது, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் அவரை வழிமறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும், குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபர் மனைவியை வெட்டுவதை கண்டு மீண்டும் திரும்பி சென்றுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளிகள் காட்டுகின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸாரால் கணவன் கைது செய்யப்பட்டார். 44 வயதான அவர் கந்தளாய் சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தராவார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பெற்றோர் நிரப்பு நிலையத்தின் சிசிரிவி கமராவில் இந்த பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்