வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொழும்பு சென்று திரும்பியவர்கள்.

மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அண்மைய நாளில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றார். அந்த இறுதிச் சடங்கில் புத்தளம் உள்ளிட்ட வெளிமாட்டங்களைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர்.

அதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்