பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

Date:

காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரில் சர்வதேச கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லையில் அத்துமீறுபவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தன்மையை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை அனுப்புகிறது கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் பாகிஸ்தான் காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது”  எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்