தமிழர் தாயகமெங்கும் வீர மறவர்களிற்கு உணர்வுபூர்வ அஞ்சலி!
தமிழ் தேசத்தின் விடுதலைக்கான தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என்றழைக்கப்பட்ட...