25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த யானை

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று (17) காலை அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை உயிரிழந்துள்ளதாகவும்
சுமார் எட்டு அடி உயரமுள்ள 25 வயதுடைய யானை ஒன்று மின்கம்பியில் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17) பிற்பகல் வடமாகாண கால்நடை வைத்தியர் பா.கிரிதரனால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

அனுமதியின்றி மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment