30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி மகாவித்தியாலத்திற்கு செல்லும் பாதை இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ்!

கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தவானந்தா உறுதியளித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பாடசாலை கல்விசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்புாது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைானத்திற்கு செல்லும் வீதியானது, இராணுவ முகாமிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், மாணவர்கள் ஏ9வீதி ஊடாக சென்று விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டிய நிலை காணப்படுவது தொடர்பிலும், அது பாதுகாப்பற்றது என்ற விடயம் தொடர்பிலும் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் அமைச்சரிடம் முன்வைத்தார்.

குறித்த விடயம் இலகுவானது எனவும், அதனை மாணவர் பாவனைக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் விளக்கமாக எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், விளையாட்டு மைதானம் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு பின்பகுதியில் அமைந்துள்ளது. அதற்கான வீதியை உள்ளடக்கி நகரில் உள்ள இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!