வடக்கில் மேலும் 15 பேருக்கு தொற்று: யாழில் அதிபர், ஆசிரியருக்கும் தொற்று!

Date:

வடமாகாணத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் யாழ் மாவட்டத்தில் 12 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

அவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் ஆசிரியரும் ஆவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதில் வடக்கில் 15 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.<

மேலும் ஒருவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றுபவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியராகச் சேவையாற்றுபவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஊக்குவிப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, "வுமென்ஸ் கோர்ப்ஸ் - ஸ்ரீலங்கா" (Women's...

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்த ஆண் ஒருவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 2007 ம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை...

இறக்காமம் விவசாய அமைப்பிற்கு ரூ.30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கல்

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்