‘எப்போதும் நீங்கள் சரியாக செய்கிறீர்கள், நடிகர்கள்தான் தவறு செய்கிறார்கள்’: டாப்ஸியின் வாக்கவாதம்!

Date:

பத்திரிகையாளர்கள் உடன் நடிகை டாப்ஸி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நடிகை டாப்ஸி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘Dobaaraa’. பிரபல இயக்குநர் அனுராக் காய்ஷாப் தான் இந்தப் படத்தின் இயக்குநர். வரும் 19ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் வெளியாகிறது. பட வெளியீடை முன்னிட்டு நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் டாப்ஸி.

நிகழ்ச்சிக்கு வரும்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவரை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்படி கேட்டதோடு, ”நிகழ்ச்சிக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்” எனக் கேட்க, இருவருக்கும் விவாதம் ஏற்பட்டது. இது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியிலும் விவாதத்தை உண்டாக்க பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கோபமான டாப்ஸி, “அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான நேரத்தில் நான் வருகிறேன். எனது வேலையை சரியாகவே செய்கிறேன் நான். எனவே, நீங்கள் மரியாதையுடன் பேசினால் நானும் மரியாதையுடன் பேசுவேன். கேமரா என் பக்கம் இருப்பதால் நான் பேசுவது மட்டுமே தெரியும். கேமரா உங்கள் திருப்பினால் தான், என்னோடு நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும்” என்று பேசினார்.

அத்துடன், நீங்கள் எப்போதும் சரிதான், நடிகர்கள் எப்போதும் தவறு செய்கிறார்கள்’ என்றார்.

இந்த விவாதங்கள் காணொளிகளாக இணையங்களில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்