சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரும், கடவத்தை – பைன்வில பிரதேசத்தைச் சேர்ந்தவருமான சந்தேகநபர் ஒருவர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் களஞ்சியத்தைக் காட்டச் சென்ற போது கல் குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
முல்லேரிய பிரதேசசபையின் பொதுஜன பெரமுன உறுப்பினரை சுட்டுக்கொன்ற சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கடுவெல வைக்கிவத்தை பகுதியில் ஆயுதங்கள் ஒருதொகை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட போது சந்தேக நபர் கற் குவாரியில் விழுந்து பலத்த காயமடைந்து அத்துகிரி ஒருல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் அத்துருகிரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது 13 பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தைக்கு மேல் உள்ள பியான்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரான் ஹர்ஹர் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.