நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து வெற்று சிலிண்டரை திருடி, விற்பனை செய்ய முயன்றவர் பொதுமக்களால் மடக்கிப் பிடித்துள்ளனர்.
பசுமலை பகுதியை சேர்ந்த நபர், டெஸ்போட் பகுதியிலுள்ள வீடொன்றிற்கு விருந்தாளியாக வந்து தங்கியிருந்துள்ளார். நேற்று (27) காலை வீடொன்றிற்குள் புகுந்து வெற்று சிலிண்டரை திருடி, கிரிமிட்டிய நகரில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
தகவலறிந்த பிரதேசவாசிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் நானுஓயா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1