27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

போலி இலக்கத்தகடு பொருத்தி எரிபொருள் நிரப்ப முயன்றவருக்கு ரூ.25,000 அபராதம்!

போலி இலக்கத்தகடு பொருத்தி வாகனத்திற்கு எரிபொருள் பெற முயன்ற ஒருவருக்கு நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

வீரகுள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிகஹமுல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய லொறியில் போலி இலக்கத் தகடு பொருத்தி டீசல் பெற முற்பட்ட லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவருக்கு கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன ரூ. 25,000 அபராதம் விதித்தார்.

வத்துருகம, இகுருகல்லவைச் சேர்ந்த லக்ஷான் பண்டார என்ற லொறி சாரதிக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த லொறியின் இலக்கத் தகடு போலியானது என்பதை கடமையிலிருந்த பொலிசார் தெரிந்து, இலக்கத் தகடு தொடர்பில் அதிகாரிகள் சாரதியிடம் விசாரணை நடத்தினர்.

கராஜில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் இலக்கத்தகட்டை பொருத்தியபடி அவர் எரிபொருள் நிரப்ப வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து,  சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தம்

east tamil

Leave a Comment