கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து டுபாய் செல்ல முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தனிஸ் அலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று மாலை உத்தரவிட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு டுபாய் செல்ல முற்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அலி கைது செய்யப்பட்டார்.
தேசிய தொலைக்காட்சி மூலம் அச்சுறுத்தல் செய்தல், ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகளைத் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தனிநபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
31 வயதுடைய நபர், குருநாகல் வெபாடாவில் வசிப்பவர்