இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் இரண்டு வாரம் தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.
அவரது குறுகிய கால அனுமதி விசா அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோட்டபாயவிற்கு ஆரம்பத்தில் 14 நாள் வரை நீடிக்கும் குறுகிய கால அனுமதி விசா வழங்கப்பட்டது.
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களுக்குப் பொதுவாக 30 நாள் வரை குறுகிய கால அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்று குடிநுழைவு, சுங்கச் சாவடிகள் ஆணையம் கூறியிருந்தது.
அதற்கு மேல் தங்க விரும்பினால் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
கோட்டாபய விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மேலும் 14 நாள் விசா நீடிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1