மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணியொன்று இடம்பெற்றது.
இன்று மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பேரணி பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுடாக சென்று விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று நிறைவடைந்தது.
பேரணியில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
பேரணியின் நிறைவில் மாற்றுப்பாலின சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றுகையும் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1