26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

குரங்கு அம்மை: சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  அறிவித்துள்ளார்.

70 க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. அதனால் இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

வல்லுநர் குழுவின் பெரும்பான்மை ஆதரவு இதற்கு இல்லை என்றாலும் இந்த உச்சகட்ட அலர்ட் முடிவை அறிவிக்க காரணம் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோய் மற்றும் தடுப்பூசி, சிகிச்சை பற்றாக்குறை காரணமாக இதனை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 16,000 குரங்கு அம்மை பாதிப்புகள், 75 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment