அரசியல் கட்சி தலைவர்களிற்கும், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
போராட்டக்காரர்கள் சார்பில் 25பேர் இன்று, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்பார்கள்.
போராட்டக்காரர்களின் கருத்துக்களை கேட்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை, நேற்று கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்த போது, பிரதமர் பதவியை துறக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே பதவிவிலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதேகருத்தை இன்று போராட்டக்காரர்களிடமும் பிரதமர் தெரிவிப்பார் எனகூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1