முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளருமான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கு, கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி மஹேஷி டி சில்வா இன்று (11) அறிவித்துள்ளார்.
ஜூன் 14, 2021 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில்
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்த கருத்தினால், தனது நற்பெயரையும் தொழில் வாழ்க்கையையும் சேதப்படுத்தியுள்ளார். எனவே, 100 கோடி ரூபா நட்டஈடாக வழங்குமாறு கோரி, தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1