இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான ஊகச் செய்திகளை திட்டவட்டமாக மறுக்க விரும்புவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி, ராஜபக்ஷக்களை காப்பாற்ற வேண்டுமென பா.ஜ.க பிரமுகர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தை தொடர்ந்து, இந்திய தூதரகம் இந்த தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
“இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் பொருந்தவில்லை” என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1