மக்கள் போராட்டத்தின் காரணமாக நாளைய தினம் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பொலிஸார் வீதியை மூடியதன் விளைவாக, மாற்று வழிகளைப் பயன்படுத்தும் போது எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விஜேரத்ன கருத்து தெரிவித்த அவர், நாளை பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், ஆனால் மக்கள் போராட்டத்திற்கு தனியார் போக்குவரத்து துறையினர் எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
பேருந்து நடத்துனர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருளை மட்டுமே பெறுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.



