ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
9ஆம் திகதி போராட்டத்திற்கு இளைஞர் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்தே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவன்ன, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபையினர் கலந்துகொண்டனர்.




