வவுனியாவில் வீதியில் பயணத்தவரின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தேணிக்கல் பகுதியில் கடந்த வாரம் வயது போன ஒரு முதியவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து பயணித்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 ஆகிய வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், பசார் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் 6 அரைப் பவுண் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.