ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த துக்கமான சூழ்நிலையில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காத நிலையிலும், ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதே ஆகும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர், பதவியில் உள்ள ராஜபக்சக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் இனியும் பதவியில் நீடிக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும், மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் மீண்டும் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1