சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை விமான நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (2) கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத் சில்வா தெரிவித்தார்.
20 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மொத்த எடை 2098 கிராம் எனவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட சுங்க விசாரணையின் போது கையிருப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக சுதத் சில்வா மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1