25.2 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இந்தியா

7 வருட காதலை மறந்து 5 மாத காதலனுடன் ஓட்டம்; உயிரை விட்ட காதலன்: உன்னை நினைத்து படம் போல சம்பவம்!

7 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ந.புதூரை சேர்ந்தவர் குமரேசன். கட்டிட தொழிலாளியான இவர் பக்கத்துகிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த 7 வருடமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தின் வறுமை நிலை அறிந்து ஏராளமாக உதவிகள் செய்த குமரேசன், அந்த பெண்ணை ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

அங்கு நாள் முழுவதும் நிற்பதால் கால் வலிப்பதாக அந்த பெண் வேதனை தெரிவித்ததால் அண்மையில் வேறொரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் 7 வருட காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் குமரேசன்.

23 ந்தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் 20ந் தேதி அந்தப் பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுதல் தெரிவித்த குடும்பத்தினர், திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்று குமரேசனுக்கு, அத்தை மகளை அதே நாளில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மதியம் புதூர் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலில் இருந்த வேப்ப மரத்தில் கயிரால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குமரேசன் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் அந்தப் பெண்ணை ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், நிச்சயம் முடிவுற்று கல்யாணம் வரை வந்து அப்பெண் வேறு ஒருவருடன் ஓடிச்சென்று உள்ளது ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அப்பெண்ணுடன் பழகிய தருணங்கள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது… பிரிந்து சென்றிருந்தாலும் பரவாயில்லை… 7 வருடமாக காதலித்தவனை 5 மாதத்தில் கிடைத்தவனுக்காக விட்டுவிட்டு சென்றதை ஏற்கவே முடியவில்லை… மேலும் இனி வேறு ஒரு பையனுக்கு இதுபோன்ற செயல் நடைபெற கூடாது எனவும் தன்னுடைய இந்த வீடியோவை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்ப வேண்டும்… மச்சான் மணி என்னை மன்னிச்சிடுடா” என்று நண்பனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த பாவமும் அறியாத அத்தை மகள் தற்போது செய்வதறியாமல் இருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

Leave a Comment