25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

யாழ். பல்கலையில் துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக மூவர் நியமனம்!

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் மூன்று துறைகளுக்கு துறைக்கான இருக்கைப் பேராசிரியர்களாக (Cadre Chair professor) மூன்று பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அங்கீகாரத்தைப் பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் சி. சிறீசற்குணராஜா தலைமையில் இன்று (25) சனிக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறை, குழந்தை மருத்துவத் துறை, மற்றும் சமுதாய, குடும்ப மருத்துவத் துறை ஆகிய துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாதிருந்த இருக்கைப் பேராசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பகிரங்க விளம்பரத்துக்கமைவாக கிடைத்த விண்ணப்பப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Medicine), மருத்துவ நிபுணருமான பேராசிரியர் தி. குமணனை மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Medicine), குழந்தை வைத்தியத் துறையில் பேராசிரியரும் (Professor in Pediatric), குழந்தை வைத்திய நிபுணருமான பேராசிரியர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸை குழந்தை வைத்தியத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Pediatric), சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Community Medicine), சமுதாய வைத்திய நிபுணருமான பேராசிரியர் குமரேந்திரனை சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் (Professor of Community Medicine) , அந்தந்தத் துறைகளுக்கான இருக்கைப் பேராசிரியர்களாகவும் (Cadre Chair professor) நியமிப்பதற்கு தெரிவுக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment