யாழ். தென்மராட்சி வரணி வடக்கு பகுதியில் தொல்பொருள் எச்சங்களான சுமைதாங்கி மற்றும் குடிநீர் கிணறு என்பன கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
யாழ் . மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி மணிமாறன் தலைமையில் குறித்த எச்சங்கள் மீள்நிர்மானம் செய்யப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமராட்சியில் இருந்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வீதியோரமாக வரணிப்பகுதியில் இந்த தொல்பொருள் எச்சங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இது 1960 ஆம் ஆண்டு வரை பாவனையில் இருந்ததாகவும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்திருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இருந்த குறித்த தொல்லியல் எச்சங்கள் தற்போது வீதி அகலிப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் அகழ்வு அதிகாரிகளால் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அளவுகளில் தற்போது மீள்நிர்மாணம் செய்யப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.