நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று (14) ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேற்று தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நடைபெற்று வந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவுபெற்றது. காலை 11.10 மணி முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.
நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காலை ராகுல் காந்தி ஆஜரான நிலையில், மதியம் வரை 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தியிடம் அலமாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஜூன் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து நேற்று காலை அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து அவர் வெளியே வந்தார். பிற்பகலுடன் விசாரணை நிறைவு பெற்றதாக அப்போது கருதப்பட்டது. எனினும் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற அமலாக்கத் துறையினரின் விசாரணை இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.
முன்னதாக, அமலாக்கத் துறையினரின் விசாரணையில் பிற்பகல் உணவு இடைவேளையின்போது, மருத்துவமனையில் உள்ள சோனியா காந்தியைப் பார்ப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் மருத்துவமனை சென்றனர்.