கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

Date:

திருமணமாகி 6 மாதங்கள் கடந்து விட்ட போதும், தமக்கிடையில் முதலிரவு நடக்க  மனைவி அனுமதிக்கவில்லையென குறிப்பிட்டு, கணவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதியொன்றில் வசிக்கும் இளம் வர்த்தகர் ஒருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், சுமார் 6 மாதங்களிற்கு முன்னர் தமக்கு பேச்சு திருமணம் நடந்ததாகவும், இருவீட்டார் சம்மதத்துடன், சீதனம் வழங்கி திருமணம் நடந்ததாகவும், எனினும், திருமணம் முடிந்து 6 மாதங்களாகி விட்ட போதும், 1 முறை கூட மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளவில்லையென்றும், அதற்கு மனைவி அனுமதிக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தம்பதியினரிடையே சமரசத்தை ஏற்படுத்த மனைவியின் பெற்றோர் முயற்சித்ததாகவும், இந்த திருமணத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும், தமது மகளிற்கு அறிவுரை கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் தாம்பத்திய உறவு கொள்வதை விரும்பவில்லையென்று மனைவி குறிப்பிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்